சித்த மருத்துவத்தில் metals உள்ளதா? அவை ஆபத்தானவையா? - மூலிகைமணி வேங்கடேசன்
Saturday, October 9, 2010
சித்தமருத்துவத்தில் Side effects உள்ளதா? - மூலிகைமணி வேங்கடேசன்

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்
அன்புள்ள டாக்டர்! (கேள்வி பதில் பகுதி)
நிலையான ஆரோக்கியம், நீடித்த ஆயுள் பெற உங்கள் கேள்விகளை கேட்கலாம்!
http://www.youtube.com/user/mooligaimani

Sunday, June 20, 2010
மூலிகைமணி ஆசிரியர் Dr.க. வேங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு விழா
www.tamilheritage.org சார்பாக மூலிகைமணி ஆசிரியர் Dr.க. வேங்கடேசன் அவர்களுக்கு 20.6.2010 அன்று சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இயக்குனர் சிகரம் K. பாலசந்தர் அவர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தார். தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் திரு. கண்ணன் மற்றும் திருமதி. சுபாஷினி, திரு. சுகுமாரன் அவர்கள் உடன் சிறப்பித்தனர்.

Tuesday, April 13, 2010
தமிழில் பேசினால் ஆயுள் அதிகரிக்கும்
தமிழில் பேசினால் ஆயுள் அதிகரிக்கும்
முன்னுரை:
கற்றுக் கொடுக்கும் இனம் தமிழினம்,
அதற்குக் கற்றுக்கொடுக்க நினைப்பது அறிவீனம்'
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும் இந்த வசனம் தமிழின் செம்மையை ஒரே வரியில் உணர்த்துவதாகும். மானிடம் எப்படி வாழவேண்டும் என்றும், எப்படி வாழக்கூடாது என்றும் பாமரன் முதல் பகுத்தறிவாளி வரை பின்பற்றும் வாழ்க்கை நெறிமுறைகளை வாழ்ந்துக் காட்டியவர்கள் தமிழர்கள். தொல்காப்பியம், சங்கப் பாடல்கள், திருக்குறள் தொடங்கி சித்தர் இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் என விரியும் தமிழ் இலக்கிய மரபு செம்மாந்த ஒரு வாழ்க்கை நெறிமுறையை நமக்கு 'பூமிக்கு வெளியே ஒரு புதையலாக' அளித்துள்ளது. இயல், இசை, நாடகம், மருத்துவம், அரசியல், போர், வணிகம், விவசாயம் என்று எதையும் விட்டுவைக்காமல் 'இப்படித்தான் வாழவேண்டும்' என்று ஒரு கோட்பாட்டினை வகுத்து, அதன்படி இன்று வரை உலகில் வாழ்பவர்கள் தமிழர்கள் மட்டுமே.
இன்றைய அறிவியல் கூட அறிந்திராத பல உடலியிங்கியல் காயகல்ப விதிமுறைகளை உணர்ந்து ஏடுகளில் பதிவு செய்துள்ளனர். கி.பு. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருமூலர் என்ற சித்தர் நம்முடைய மூச்சுப் பயிற்சி மற்றும் உணவையும் நெறிப்படுத்திகொண்டால் மனிதனின் வாழ்வு 120 ஆண்டுகள் என்று உறுதியாகக் கூறுகின்றார். நோய் அணுகா விதிகள், சாகாக் கலை, யோகம் போன்ற நுட்பமான செயல்களில் பிராணசக்தியின் பங்கு அதிகமானது.
'பிராணாயாமம்' 2 என்று பின்னர் சமஸ்கிருதத்தில் மாற்றியமைக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படும் இந்த மூச்சுப் பயிற்சியின் அடிப்படையே தமிழ் மொழி தான்.
தமிழ் மொழியின் ஒலி, எழுத்து, சொல், பொருள் யாவும் நம் உடலின் இயக்கத்துடன் ஒன்றி செயல்படுகின்றது. தமிழில் பேசினால் உடலின் இயக்கமும் மூச்சு நடையும் நெருக்கமாக இயைந்து இரண்டும் சீராகி அதன் பயனாக வாழ்நாள் அதிகரிக்கின்றது 1 என்பது அனுபவ உண்மை. இதை உறுதிப்படுத்தவே இந்த ஆய்வு. தமிழில் அதிகம் பேசும் பட்டிமன்ற பேச்சாளர்கள், தமிழாசிரியர்கள், திருமுறை அர்ச்சகர்கள், மற்றும் நம் வீட்டிலேயே உள்ள 80 வயதைக் கடந்த தாத்தா-பாட்டி ஆகியோரின் ஆரோக்கியத்திற்கான காரணம் இவர்கள் அனைவரின் பேச்சு முழுக்க முழுக்க தமிழிலேயே அமைந்தது தான் மூலகாரணமாகும். சுருக்கமாகச் சொன்னால் பழந்தமிழரின் வாழ்நாள் ரகசியம் என்பது அவர்களின் ‘தமிழ்ப் பேச்சே’
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, உ.வே. சாமிநாதய்யர், தேவநேய பாவாணர், கி.வா. ஜகந்நாதன், கிருபானந்தவாரியார் சுவாமிகள், மகாவித்துவான் வேணுகோபால பிள்ளை,
முத்தமிழ்க் காவலர் கி.அ.பெ. விஸ்வநாதம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி,
பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தம் போன்ற முதுபெரும் அறிஞர்கள் 80 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள்.
தமிழ் எழுத்துக்களின் பிறப்பியலை விரிவாகத் தொல்காப்பியத்தில் நமக்கு விவரிக்கின்றார் தொல்காப்பியர். சித்தர்கள், மூச்சுப் பயிற்சியில் குறிப்பிடும் ஆறு ஆதாரங்களினால் வரும் அதிர்வுகளே ஒலி - எழுத்துக்கள் வரக் காரணமாக உள்ளதாகக் கூறுகின்றனர்.
உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சிலும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறு இயல
திறம்படத் தெரியும் காட்சியான
(தொல். எழுத்து. பிறப்பு. 1)
எழுத்துக்கள் பொதுவாக எவ்வாறு பிறக்கின்றன என விளக்குவது பிறப்பியல் இலக்கணம். தொல்காப்பியர் பிறப்பியலின் முதல் நூற்பாவில் எழுத்துகளின் பொதுப் பிறப்பு முறையை விளக்குகிறார்.
1. கொப்பூழ் அடியாகத் தோன்றி மேலே எழுகின்ற உதானன் எனும் காற்று தலையிலும், கழுத்திலும், நெஞ்சிலும் தங்குகிறது.
2. பின்னர்த் தலை, கழுத்து, நெஞ்சு எனும் அம்மூன்றுடன் பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் உட்பட எட்டு இடங்களிலும் ஓர் உறுப்போடு ஓர் உறுப்பு பொருந்தி அமைய ஒலிகள் உருவாகின்றன.
3. இவ்வாறு காற்று எழுந்து வெவ்வேறு உறுப்புகளின் வெவ்வேறு முயற்சிகளால் எழுத்துகள் பிறப்பதால் அவ்வெழுத்துகள் வெவ்வேறாகத் தோன்றுகின்றன.
இதன் பொருளை ஆராயுமுன், சித்தர்கள் கூறும் மூச்சுப் பயிற்சியில் ஆறு ஆதாரங்கள் பற்றிக் காண்போம்;
தலை, மிடறு, நெஞ்சு எனும் மூன்று இடங்களில் காற்று பொருந்தும் தன்மையைத் தொல்காப்பியர் சுட்டிக்காட்டுகின்றார். சித்தர்கள் காட்டிய ஆறு ஆதாரங்களில் தொல்காப்பியம் கூறும் இந்த மூன்று இடங்களும் உள்ளன.
சித்தர்கள் கருத்தினைத் தொல்காப்பியர் நூற்பாவுடன் பொருத்தும்போது,
இடம் அதிர்வு இதழ்கள் ஒலி எழுத்து
தலை 2 2 2
மிடறு 16 16 16
நெஞ்சு 12 12 12
30 30 30
இவற்றின்று, தமிழில் உள்ள உயிரொலிகள், மெய்யொலிகள் ஆகிய முப்பதும், தலை, மிடறு, நெஞ்சு எனும் மூன்று ஆதாரங்களிலிருந்து தான் தோன்றுகின்றன என்பது புலனாகும்.
பிராணாயாம யோகப் பயிற்சியும் இதே அடிப்படையில் அமைகிறது. பிராணாயமம் தரும் பலன்களாக நம் நுரையீரல் வலுவடைந்து - விரிவடைந்து பிராண வாயு சீராக சுழல்கிறது என்றும், இதனால் உள்ளுறுப்புகள் நன்றாகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதன் பயனாக ஆயுள் அதிகரிக்கின்றது 2 என்று உலக அரங்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒப்புநோக்கினால், தமிழைப் பேசினாலே இந்த 6 ஆதாரங்களினால் வரும் அதிர்வினாலும், தமிழுக்கே உள்ள மெல்லினம், இடையினம், வல்லினத்திற்க்கான மாத்திரை உச்சரிப்பினாலும், பிராணாயமம் செய்வதால் வரும் அதே பலன்களை தமிழில் பேசும்போது நாம் பெறுகின்றோம் என்பது புலப்படும்.
இக்கருத்தைச் சோதனைச் செய்ய தமிழ்க்கடவுளான முருகப் பெருமானை நினைத்து அருணகிரிநாதர் அருளிய ‘கந்தரனுபூதி’யை வாய்விட்டுப் பாடிப்பாருங்கள், அதற்கு முன் பின் உங்கள் இரத்த அழுத்தத்தை குறித்துக்கொள்ளுங்கள். இந்தப் பாட்டின் அமைப்பு மெல்லினத்தில் தொடங்கி, இடையினமாக தொடர்ந்து கடைசியில் வல்லினத்தில் முடியும். 51 பாடல்களையும் பாடி முடிக்கும் தருணம் சுவாசம் சீரடைந்து, ரத்த நாளங்களில் புத்துணர்ச்சி பாய்வதை உணரலாம். அறிவியல் ரீதியாக ரத்த ஓட்டம் சீரடைவதால் பிராணவாயு மற்றும் சப்த தாதுக்கள் எல்லா உள்ளுறுப்புகளுக்கும் பரவி அவைகளை மேலும் நன்னிலையில் செயல்பட வைக்கின்றது. இதனால், திசுக்களின் வாழ்நாள் நீடிக்கின்றது, ஆரோக்கியம் நிலைக்கின்றது.
முடிவுரை:
தமிழில் பேசுவதால் நுரையீரல் வலுவடைந்து, விரிவடைந்து பிராண வாயு சுழற்சி அதிகரித்து, வாழ்நாள் நீடிக்கும்.
நீடிய நலவாழ்வை அளிக்கும் காயகல்ப மருந்தை சிட்த்ஹர்கள் அமிர்தம் என்று குறிப்பர். ‘தமிழ்மொழி’ அதன் உச்சரிப்பிலேயே காயகல்பமாக விளங்குகிறது என்பதை மேற்கண்ட கருதுகோள் உறுதிப்படுத்துகிறது.
பாரதிதாசன் பாடிய ’தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற வைர வரியிவ் கவிதைமட்டுமல்ல, அறிவியலும் அனுபவ உண்மையும் உள்ளது. இதனை இன்றைய அறிவியல் வல்லுநர்கள் ஆய்ந்து, ‘தமிழ்’ வெறும் மொழி மட்டுமல்ல; மாந்தர்க்கு வாழ்நாளை நிலைக்கச்செய்யும் காயகல்பமுமாகும் என்பதை நிறுவலாம்.
Dr . பாலாஜி, சென்னை : 91-9094777222

- 1. மூலாதாரம்
- 2. சுவாதிட்டானம்
- 3. மணிபூரகம்
- 4. அநாகதம்
- 5. விசுத்தி
- 6. ஆக்ஞை
- ‘அ’ முதல் ‘ஔ’ வரை - 12
- ‘க’ வரிசை - 4
- ‘ங’ வரிசை - 1
- ‘ச’ வரிசை - 4
- ‘ஞ’ வரிசை - 1
- ‘ட’ வரிசை - 4
- ‘ண’ வரிசை - 1
- ‘த’ வரிசை - 4
- ‘ந’ வரிசை - 1
- ‘ப’ வரிசை - 4
- ‘ம’ முதல் ‘ன’ வரை வகைக்கு ஒன்று - 9
- ஹ, ஜ, ஷ, ஸ, க்ஷ ஆகிய வகைக்கு ஒன்று - 5
- ஓம் - 1
- மொத்தம் - 51
தலை, மிடறு, நெஞ்சு எனும் மூன்று இடங்களில் காற்று பொருந்தும் தன்மையைத் தொல்காப்பியர் சுட்டிக்காட்டுகின்றார். சித்தர்கள் காட்டிய ஆறு ஆதாரங்களில் தொல்காப்பியம் கூறும் இந்த மூன்று இடங்களும் உள்ளன.
சித்தர்கள் கருத்தினைத் தொல்காப்பியர் நூற்பாவுடன் பொருத்தும்போது,
இடம் அதிர்வு இதழ்கள் ஒலி எழுத்து
தலை 2 2 2
மிடறு 16 16 16
நெஞ்சு 12 12 12
30 30 30
இவற்றின்று, தமிழில் உள்ள உயிரொலிகள், மெய்யொலிகள் ஆகிய முப்பதும், தலை, மிடறு, நெஞ்சு எனும் மூன்று ஆதாரங்களிலிருந்து தான் தோன்றுகின்றன என்பது புலனாகும்.
பிராணாயாம யோகப் பயிற்சியும் இதே அடிப்படையில் அமைகிறது. பிராணாயமம் தரும் பலன்களாக நம் நுரையீரல் வலுவடைந்து - விரிவடைந்து பிராண வாயு சீராக சுழல்கிறது என்றும், இதனால் உள்ளுறுப்புகள் நன்றாகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதன் பயனாக ஆயுள் அதிகரிக்கின்றது 2 என்று உலக அரங்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒப்புநோக்கினால், தமிழைப் பேசினாலே இந்த 6 ஆதாரங்களினால் வரும் அதிர்வினாலும், தமிழுக்கே உள்ள மெல்லினம், இடையினம், வல்லினத்திற்க்கான மாத்திரை உச்சரிப்பினாலும், பிராணாயமம் செய்வதால் வரும் அதே பலன்களை தமிழில் பேசும்போது நாம் பெறுகின்றோம் என்பது புலப்படும்.
இக்கருத்தைச் சோதனைச் செய்ய தமிழ்க்கடவுளான முருகப் பெருமானை நினைத்து அருணகிரிநாதர் அருளிய ‘கந்தரனுபூதி’யை வாய்விட்டுப் பாடிப்பாருங்கள், அதற்கு முன் பின் உங்கள் இரத்த அழுத்தத்தை குறித்துக்கொள்ளுங்கள். இந்தப் பாட்டின் அமைப்பு மெல்லினத்தில் தொடங்கி, இடையினமாக தொடர்ந்து கடைசியில் வல்லினத்தில் முடியும். 51 பாடல்களையும் பாடி முடிக்கும் தருணம் சுவாசம் சீரடைந்து, ரத்த நாளங்களில் புத்துணர்ச்சி பாய்வதை உணரலாம். அறிவியல் ரீதியாக ரத்த ஓட்டம் சீரடைவதால் பிராணவாயு மற்றும் சப்த தாதுக்கள் எல்லா உள்ளுறுப்புகளுக்கும் பரவி அவைகளை மேலும் நன்னிலையில் செயல்பட வைக்கின்றது. இதனால், திசுக்களின் வாழ்நாள் நீடிக்கின்றது, ஆரோக்கியம் நிலைக்கின்றது.
முடிவுரை:
தமிழில் பேசுவதால் நுரையீரல் வலுவடைந்து, விரிவடைந்து பிராண வாயு சுழற்சி அதிகரித்து, வாழ்நாள் நீடிக்கும்.
நீடிய நலவாழ்வை அளிக்கும் காயகல்ப மருந்தை சிட்த்ஹர்கள் அமிர்தம் என்று குறிப்பர். ‘தமிழ்மொழி’ அதன் உச்சரிப்பிலேயே காயகல்பமாக விளங்குகிறது என்பதை மேற்கண்ட கருதுகோள் உறுதிப்படுத்துகிறது.
பாரதிதாசன் பாடிய ’தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற வைர வரியிவ் கவிதைமட்டுமல்ல, அறிவியலும் அனுபவ உண்மையும் உள்ளது. இதனை இன்றைய அறிவியல் வல்லுநர்கள் ஆய்ந்து, ‘தமிழ்’ வெறும் மொழி மட்டுமல்ல; மாந்தர்க்கு வாழ்நாளை நிலைக்கச்செய்யும் காயகல்பமுமாகும் என்பதை நிறுவலாம்.
Dr . பாலாஜி, சென்னை : 91-9094777222
Fairness cream நிஜமான முகம் கோரமானவையே!!

7 நாட்களில் அழகான பொன்னிற சர்மம், சிகப்பழகு, வசீகரம்
அப்படியே தன்னம்பிக்கை வளர்ந்து உலகை வெல்லலாம் என்றெல்லாம் விளம்பரங்கள்
வரிசையில் வந்து உங்கள் அழகை உயர்த்த வரிந்து கட்டி நின்றாலும், அந்த
களிம்புகளின் (Fairness cream) நிஜமான முகம் கோரமானவையே.
வெளிர்
சர்மத்தின் மீதுள்ள மோகத்தால் ஆண்களும் இந்த களிம்புகளை
பயன்படுத்துகின்றனர். நிறம் மாறவில்லை என்றால் பணம் வாபஸ் என்ற
உத்திரவாதத்தோடு வரும் இந்த களிம்புகள் பெரும்பாலும் சர்ம நிறத்தை
மாற்றுகின்றது, கூடவே தோல் புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள், சர்ம
நோய், நரம்பு தளர்ச்சி, வெண்புள்ளிகள், அரிப்பு, முகப்பருக்கள் என்று பல
இலவச இணைப்புகளையும் தருகின்றன. சிகப்பழகிற்காக நாம் கொடுக்கப்போகும்
விலை தான் அதிகம்.
உண்மையில், சர்மத்தின் நிறம் மரபு சார்ந்த ஒரு
விஷயமாக இருந்தாலும், சூரிய ஒளியின் தாக்கமே நம்முடைய நிறத்தை
தீர்மானிக்கின்றது. எப்படி?
நாம் வாழும் Tropical Region-ல் இடத்தில்
சூரிய கதிர்வீச்சு அதிகமாக (UV Rays or Ultra violet rays) இருக்கும்.
இந்த கதிர்கள் நம் சர்மத்திற்கு சரியானதல்ல. சர்ம அரிப்பு, சர்மவறட்சி
போன்றபாதிப்புகள் உண்டுசெய்யும். இந்த தீய கதிர்களிலிருந்து நம்மை
பாதுகாக்கவே நம் சர்மத்தில் மெலனின் (Melanin) என்ற நிறமி (Pigment)
உள்ளது. நம்மீது விழும் சூரிய கதிர்களின் அளவினைப் பொறுத்து இந்த
நிறமிகளின் உற்பத்தி அதிகரிக்கும். இப்போது உங்களுக்கு புரியுமே..
அதிக சூரிய கதிர்வேச்சு
அதிக மெலனின் உற்பத்தி
குறைந்த UV Rays பாதிப்பு
மேல்நாடுகளில்
மக்கள் Sun bath என்ற முறையில் பரவலாக தங்கள் சர்மத்தின் மெலனின் அளவினை
அதிகமாக்க முற்படுகிறார்கள். பூமியின் ஓசோன் மண்டலத்தின் சேதம் காரணமாக
சூரிய கதிர்வீச்சில் உள்ள UV rays அளவு எப்போது இருந்ததைவிட இப்போது
அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. இந்த வேளையில், இங்கு உள்ள
UV radiation அளவும் அதிகமே. சரி, இதற்கும் சிகப்பழகு களிம்பிற்க்கும்
என்ன தொடர்பு என்று வியக்க வேண்டாம்...
இந்த களிம்புகளில்
சேர்க்கப்படும் மூலப்பொருள்கள் UV கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து நம்மை
காக்கும் மெலனின் உற்பத்தியை குறைத்து அல்லது சில சமயம் தடை செய்து, Sun
screen என்ற ரீதியில் மெலனின் நிறமியின் உற்பத்தியை தடுக்கின்றது, இதனால்
நம் நிறம் கருப்பதில்லை, இது கவசமின்றி போர் புரிவதற்கு ஒப்பாகும்.
சிலவகை களிம்புகளில் Hydroquinone என்ற வேதிப்பொருள் செர்க்கபடுகின்றது,
இது சர்மத்தை Bleach செய்வதன் மூலம் வெண்மையான தோற்றத்தை அளிக்கின்றது.
இதுவே அவர்கள் ஏழு நாட்களுக்குள் வெண்மை என்றளிக்கும் உத்திரவாதத்தின்
அடிப்படை. ஆய்ந்து பார்த்தால், இந்த களிம்புகளை தொடர்ந்து
பயன்படுத்தும்போது வெண்மையான சர்மம் நமக்கு கிடைக்கும், ஆனால் நமக்கு
கவச-குண்டலாமாக நம்முடன் பிறந்த மெலனின் நிறமியின் பாதுகாப்பு அரணை
நாளடைவில் இழக்க நேரிடும் என்பதே கசப்பான உண்மை.
சித்த மருத்துவத்தில்
உலோகங்கள் (metals) மற்றும் ஸ்டிராய்ட்ஸ் (steroids) உள்ளது, அவை
சிறுநீரக செயளிழப்பிற்கு வழி செய்யும், என்று உண்மை தெரியாமல் அரைக்கூவல்
விடுபவர்களுக்கு ஒரு செய்தி, சிகப்பழகு களிம்புகளின் பிராதான
மூலபோருள்கள் cortico steroids and clobetasol propionate. இவை நம்முடைய
சர்மத்தை சீர்குலைக்கும் தன்மை உடையது. அதாவது, இந்த களிம்புகளை
பயன்படுத்தும் போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, நம் சர்மத்தை
இளமையாக வைத்திருக்கும், ஆனால் தொடர்ந்து உபயோகப்படுத்தாமல்
விட்டுவிட்டால் சர்மம் நலிவடைந்து சுருக்கங்கள் அதிகரித்து, பருக்கள்,
வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் தோன்றும். அடுத்தபடியாக, Mercury கலந்த
சிகப்பழகு களிம்புகளில் உள்ள உலோகம் சர்மம் வழியாக உடல்புகுந்து, நரம்பு
மண்டலத்தை தாக்கி, சிறுநீரகத்தில் தங்கி, அதனை செயலிழக்க செய்கின்றது.
மலிவான களிம்புகளில் கலக்கப்படும் அமோனியா சர்மத்தில் புண்களையும்,
அரிப்புகளையும் ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் FDA, கென்யா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளும் இந்த வகை களிம்புகளை தடை செய்துள்ளது.
ஆயுர்வேத
முறைப்படி செய்யப்பட்ட களிம்புகள் என்று விளம்பரபடுத்தப்படும்
களிம்புகளும் உண்மையில் Hydroquinone, Kojic Acid ñŸÁ‹ Retinoic Acid
கலப்புகள் இல்லாமல் செய்யப்படுவதில்லை. உண்மையில் பாரம்பரிய மூலிகைகள்
கொண்டு செய்யப்படும் களிம்புகள் இவ்வளவு மலிவான விலையில் செய்ய முடியாது
என்பதே நடைமுறை உண்மை.
காசு கொடுத்து வினையை விலைக்கு வாங்கும் வழி தான் இந்த சிகப்பழகு களிம்பு. வெண்மைக்கு பின் இருக்கும் கருப்பு உண்மை இதுதான்.
சர்மத்தை பாதுகாக்க நம் வீட்டிலேயே பல இயற்கையான பாதுகாப்பான வழிகள் உள்ளன,
தினமும் ஒரு முறை பன்னீர் 20 மில்லி + குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவிவிடவும்.
சோற்றுகற்றாழை மடலை வெட்டி அதனுள் இருக்கும் குழகுழப்பான சோற்றை குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிடவும்.
வெட்டிவேர் + சந்தனத்தை அரைத்து பூசி பின் பாசிப்பருப்பு பொடியில் கழுவ முகம் பொலிவடையும்.
பெண்கள்
மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பிரகாசமடைந்து, எண்ணெய் வடியாமல்,
கரும்புள்ளிகள்- பருக்கள் நீங்கி, அழகாவும் - இளமையுடனும் முகத்தை
வைத்திருக்கலாம்.
-பாலாஜி, மூலிகைமணி +91-9094777222

உலக சித்தர் திருநாள்
உ
நற்பவி
தேவை: ‘சித்தர் அறிவியல் தமிழ் மையம்’
முனைவர் மூலிகைமணி க. வேங்கடேசன்.
23, துரைசாமி சாலை, தி. நகர். சென்னை: 17. தொலைபேசி: 24331494 கைப்பேசி: 9003031796
www.mooligaimani.com
___________________________________________________________________நற்பவி
தேவை: ‘சித்தர் அறிவியல் தமிழ் மையம்’
முனைவர் மூலிகைமணி க. வேங்கடேசன்.
23, துரைசாமி சாலை, தி. நகர். சென்னை: 17. தொலைபேசி: 24331494 கைப்பேசி: 9003031796
www.mooligaimani.com
உலக சித்தர் திருநாள் (14.4.2010)
தமிழ் மொழி, கலை, பண்பாடு பற்றி எல்லோரும் அறிவர். ஆனால் தமிழ் மொழி அளித்த முழுமையான அறிவியலான சித்தர் நெறியைப் பற்றி வெகு சிலரே அறிவர். வாதம், வைத்தியம், யோகம், ஞானம் என நால்வகை அறிவியல் பகுப்புகள் கொண்டவை சித்தர் நெறி. குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படும் 'அறிவர் குழுமம்' (Intellectual forum) பிற்காலத்தில் (கி.பி 5 -ஆம் நூற்றாண்டில்) சித்தர் மரபாக மருவியது. தொல்காப்பியர்தான் முதன் முதலாக 'அறிவர்' பற்றிக் குறிப்பிடுகின்றார்,
பார்ப்பார் 'அறிவர்' என்றிவர் கிளவி
- என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்
- என்பது அவர் அறிவர் பற்றிக் கூறும் விளக்கம்.
கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என அமையும் மூன்று காலங்களையும் குற்றமற உணர்த்தவல்லவர்களே 'அறிவர்' என்பது இதன் விளக்கம்.
இன்று நாம் குறிப்பிடும் சித்தர் எனும் ஞானியரே தொல்காப்பியர் காலத்தில் 'அறிவர்' என்றழைக்கப்பட்டனர்.
'அறிவர் என்போர் இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் மூன்று காலங்களையும் அறிந்த பெரியோர், யோகிகளாய் உபாயங்களால் மூன்று காலமுணர்ந்த மாமூலர் முதலியோர் இவ் அறிவரில் ஒருசாரார்' என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய 'அறிவர் மரபு' 5-ஆம் நூற்றாண்டில் விரிவடைந்து இன்று 'பதினெண் சித்தர்' என்று போற்றுமளவுக்கு தமிழில் வாதம், வைத்தியம், யோகம், ஞானம் ஆகிய அறிவியல் செய்திகளை நூற்றுக்கணக்கான பாடல்களில் பதித்துவைத்துள்ளனர். கால வெள்ளத்தால் அடித்துக் சென்று அழிந்தவை போகவும், கரையான்களால் அரித்துத் தின்றவை போகவும், வெந்நீர் காய்ச்ச அடுப்பெரிக்கப் பயன்படுத்தியவை போகவும், எஞ்சியுள்ள சுவடிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தவற்றை கடந்த 100 ஆண்டுகளில் திரட்டி சிலவற்றை அச்சில் பதிப்பித்தனர், பலவற்றை நூலகங்கள் மற்றும் பரம்பரை சித்த மருத்துவர்களிடம் முடங்கியுள்ளன. இவை ஏறக்குறைய 400 ஆண்டுகளில் ஏட்டில் எழுதப்பட்ட செவிவழிக் செய்திகளே ஆகும். சித்தர்கள் யாரும் தம் கையால் எழுதி பதிப்பிக்கப்பட்டவை அல்ல. இயல், இசை, நாடகத் தமிழ் போல் சித்தர் தமிழ் மிகுந்த அருமை-பெருமை உடையதாகும். பகுத்தறிவுடன் பெருமளவு பொருந்துபவை சித்தர்களின் தத்துவஞானம். சித்தர்கள் உடம்பை 'மெய்' என்றனர். வேதாந்திகள் உடம்பை 'மாயை' என்றனர், அதே போல் சித்தர்கள் மனித வாழ்வை காயகல்ப மூலிகைகள் மூலம் நிலைப்படுத்தி யோக நெறிகள் மூலம் மேம்படுத்தி 'ஏழாவது' அறிவான 'அறிவுக்கண்' திறக்க முயலவேண்டும் என்றனர். சித்தர்களுக்கு ‘அறிவுக்கண்’ எனும் மூன்றாவது கண் இருந்தது. இதுவே எதிர்காலத்தினை உணர்த்த வல்லது. 'தொலைவில் உணர்தல்’ என்பார் மறைமலை அடிகள்.
சித்தர் நெறி நான்கு வகையாகும்
1) வாதம் (Alchemy)
2) வைத்தியம் (Medicine)
3) யோகம் (Yoga)
4) ஞானம் (Wisdom)
2500 ஆண்டுகால வரலாறு கொண்ட 'சித்தர் நெறி' இன்றுவரை உலகால் அறியப்படாத மறைபொருளாகவே உள்ளது. காரணம் 'சித்தர் தமிழ்' எனும் மறைமொழியில் சித்தர் நெறி வடிவமைக்கப்பட்டது தான். இது தவறல்ல, இன்றைய வேதியலில் மறைபொருள் (Che இருப்பதைக் காணலாம். அதாவது, 2 ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்சிஜன் அணுவுடன் இணையும் போது தண்ணீர் உருவாகின்றது என்பதை இவ்வாறாக வேதியல் மொழியில் குறிக்கின்றனர்,
2 H 2 + O 2 = 2 H 2 O (Water)
இதைப்போலவே, சித்தர் தமிழ் மறைபொருளாக சித்தர் அறிவியலைக் குறிப்பிடுகிறது.
'சிவாயநம என செம்பு பொன்னாகும்'
எனும் alchemic formula சிவபெருமானை குறிப்பதல்ல. அது ஒரு சித்தர் அறிவியல் மறைபொருளாகும்.
அதேபோல், சித்தர்களின் பிற அறிவியல் பிரிவுகளான 'மருத்துவ மறைபொருள்' யோக சூத்திரங்கள், தத்துவ ஞானம் ஆகியன அனைத்தும் வேதியியலுக்கு இணையான மறைபொருளால் தமிழில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை அறிவதும்- ஆராய்வதும் ஒரு அறிவியல் அகழ்வாராய்ச்சிக்கு இணையாகும். முத்தமிழை தொகுத்த நம் முன்னோர்கள், ஏனோ சித்தர் தமிழை தொகுக்கவில்லை, அதனால் ஆராயப்படவுமில்லை. ஆனால் அந்த மறைமொழி இன்றும் அழியாமல் பரம்பரைச் செல்வமாக சிலரிடம் வாழ்ந்து வருகிறது. அதன் விளைவாகத் தான் இன்று 'சித்த மருத்துவம்', 'யோகப் பயிற்சி' போன்றவை மறுமலர்ச்சி பெற்று வருவதன் பின்னணியாகும்.
1972- இல் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் எடுத்த தீவிர முயற்சியால் சித்தர் அறிவியலின் இரண்டாவது, முன்றாவது பிரிவுகளான சித்த மருத்துவமும், யோகக்கல்வியும் புத்துயிர் பெற்று வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக 'உலக சித்தர் திருநாள்' சித்த மருத்துவர்களால் சித்திரைத் திங்கள் முதல் நாளன்று கொண்டாடப்படுகின்றது. இது சித்தர் அறிவியலுக்கு எழுச்சியூட்டுகின்றது. இந்த நாளினை சித்த மருத்துவர்கள் மட்டுமே கொண்டாடுவது என்றல்ல, தமிழர்கள் அனைவருமே கொண்டாடவேண்டிய திருநாள். எனவே, கீழ்க்கண்ட சில வேண்டுகோள்களை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதை என் தலையாய கடமையாகக் கருதுகின்றேன்,
1) சித்தர் அறிவியல் நெறி என்ற பெயரில் சித்தர்கள் அளித்த வாதம், வைத்தியம், யோகம், ஞானம் எனும் அறிவியல் கருத்துக்களைத் தொகுக்க வேண்டும்.
சித்தர்கள் என்போர் சாமியார்களோ அல்லது ஆன்மீகவாதிகளோ அல்லர், அவர்களின் கண்டுபிடிப்புகளிலும், அனுபவங்களிலும் எள்ளவுகூட கற்பனையோ அல்லது பொய்யுரைகளோ இல்லை, அனைத்தும் அறிவியல் அடிப்படை கொண்டவையே, அதனால் தான் இன்றைய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட சித்த மருந்துகளும், யோகக் கல்வியும் மேனாட்டு ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சித்தர்களின் அறிவியல் கருத்துக்களை 'சித்தர் அறிவியல்' (Siddhar's science) எனும் பெயரில் தொகுத்து அரசுடைமையாக்க வேண்டும். இதற்காக முதல் செம்மொழி மாநாட்டில் ‘சித்தர் அறிவியல் தமிழ்’ எனும் பெயரில் விரிவான ஆய்வரங்கம் அமைத்து அறிஞர்களால் ஓர் திட்டவரைவு தயாரிக்கப்பட்டுத் தமிழ்நாடு அரசுக்குப் பரிவுரை செய்யவேண்டும், அதனைத் தமிழ்நாடு அரசு
'தமிழக சித்தர் அறிவியல் தமிழ் ஆய்வு மையம்' என்ற பெயரில் கோவையில் மருதமலை அருகில் 25 ஏக்கர் பரப்பளவில் சித்த மருத்துவ வல்லுனர்கள் வழிகாட்டுதலில் இதனை அமைக்க வேண்டும்.
2) அடுத்த ஆண்டு 14.4.2011-இல் தமிழ்நாடு அரசே 'உலக சித்தர் திருநாளைக்' கொண்டாட வேண்டும்.
3) 'சித்தர் தமிழ்' எனும் பெயரில் சித்தர்களின் வாழ்வியல், அறிவியல் கருத்துக்களை விரைந்து தொகுத்து எளிய தமிழில் விளக்கும் வண்ணம் செம்மொழி மாநாட்டில் தனி ஆய்வரங்கம் அமைத்து அவற்றை வெளியிட வேண்டும். இதனைத் தொடர் பணியாக நடத்திட செம்மொழி ஆய்வு மையத்தில் தனித் துறை ஒன்றை உருவாக்க வேண்டும்.
4) சித்தர்கள் அளித்த காயகல்ப மருத்துவம் என்பது உலக மருத்துவ ஆய்வுக்குத் தமிழன் அளித்த மருத்துவக் கொடையாகும். உலகால் அறியப்படாத ரகசியமாக சிதறிக்கிடக்கும் இந்தக் காயகல்ப மருத்துவ முறையை இன்றைய நவீன மருத்துவ ஆய்வுடன் கீபிளி தரத்திற்க்கு ஒப்பாய்வு நிகழ்த்தினால், அடுத்துவரும் தலைமுறையினர் வாழ்வில் ‘நீடிய நலவாழ்வு’ பெறுவார்கள்.
5) பதினெண் சித்தர்களை அறிவியல் அறிஞர்களாக செம்மொழி மாநாட்டில் அறிவித்து, அவர்களின் திருவுருவச் சிலைகளை 'சித்தர் அறிவியல் கோட்டம்' என்ற பெயரில் நிறுவிட தமிழ்நாடு அரசு செம்மொழி மாநாட்டில் அறிவித்து அடுத்த ஆண்டில் இதனை கலைஞர் தலைமையில் பேராசிரியர் அவர்கள் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்.
உலக சித்தர் திருநாளைக் கொண்டாடும் நல்வேளையில் தமிழக அரசு செம்மொழி மாநாட்டின் வெளிப்பாடாக 'சித்தர் அறிவியல் தமிழை; உலகிற்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் மேற்கண்ட 5 கோரிக்கைகளை ஆய்வு செய்து நடைமுறைபடுத்துவதால் சித்த மருத்துவம் புத்துயிர் பெறும், மேலும் நமது அரசிற்கு வருமானம் வரும் வகையில் Medical tourism திட்டம் மூலம் கோடிக்கணக்கான பொருளையும் பெறலாம். கேரள அரசு இதற்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது. சராசரியாக 200 முதல் 300 கோடி வரை இந்த Medical tourism மூலம் கேரள அரசு வருமானம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க சித்தர் நெறி! வளர்க சித்த மருத்துவம்!!

Subscribe to:
Posts (Atom)